இலங்கையில் உள்ள இஸ்ரேலியரை வெளியேற்றக் கோரி, இலங்கை அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

11 months ago



இலங்கையில் தங்கியிருக்கும் இஸ்ரேலியர்களை வெளியேற்றக் கோரியும் பலஸ்தீனுக்கு எதிரான இனப்படுகொலைகளை உடனே நிறுத்தக் கோரியும் இலங்கை அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (20) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை சோசலிசக் கட்சியின் சார்பில் துமிந்த நாகமுவ, மக்கள் போராட்ட அமைப்பிலிருந்து ஸ்வஸ்திகா, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமைத்துவ சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், முஸ்லிம் முற்போக்கு சக்தி மிப்லால் மௌலவி ஆகியோர் கலந்துகொண்டனர்.