




பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் அதிக நேரத்தை கைபேசியில் செலவிடுகின்றனர்.
தரம் 5 வரையான மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் மட்டுமே சேவையில் உள்ளனர்.
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்
என்று தெரிவித்து கோப்பாயில் நேற்று போராட்டம் இடம்பெற்றது.
கோப்பாய் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
பாடசாலைக்கு முன்பாக நடந்த இந்தப் போராட்டத்தின் போது பிரதான வீதியை வழிமறித்தும் பெற்றோர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து போராட்ட இடத்துக்கு வருகை தந்த வலய கல்வி பணிமனை அதிகாரி பெற்றோருடன் உரையாடினார்.
இதன் பின்னர், நாளை (இன்று) ஜனாதிபதி, ஆளுநர், கல்வித் திணைக்களத்துக்கு மனு அளிப்பதாகக் கூறி பெற்றோர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இதேநேரம், நேற்றைய தினம் பாடசாலைக்கு மாணவர்கள் எவரும் சமுக மளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
