விருப்பு வாக்கு தொடர்பான வாக்காளர் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்குப் போதிய அறிவு இருக்கவில்லை - தேர்தல் கண்காணிப்பாளர்கள் அறிவிப்பு

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் அமைதியான ஒன்றாக இருந்தாலும், விருப்பு வாக்கு தொடர்பான வாக்காளர் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்குப் போதிய அறிவு இருக்கவில்லை என்பது கரிசனைக்குரியது எனப் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணித்த சர்வதேச அமைப்புகளில் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் ஒன்றாகும்.
பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு இலங்கையில் நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், விருப்புவாக்கு தொடர்பான தெளிவு குறித்து கரிசனைத் தெரிவித்துள்ளது.
வாக்காளர்களின் விருப்பத்துக்கு அமைவாகத் தேர்தல் வேட்பாளர்களை வரிசைப்படுத்துவதற்கு விருப்பு வாக்கு முறைமை வழி செய்கிறது.
இலங்கையில் வாக்குச் சீட்டில் 3 வேட்பாளர்களை, வாக்காளர் தமது விருப்பத்தின் ஒழுங்கில் குறித்து வாக்களிக்க முடியும்.
இந்த விடயத்தில் வாக்காளர்களுக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் போதிய அறிவைப் புகட்டும் வகையிலான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
அதேநேரம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பேணப்பட்ட அமைதி, அடுத்தடுத்தத் தேர்தல்களிலும் பேணப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
