யாழ். காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் ரயில்களில் இருந்து தொடர்ச்சியாக டீசல் திருடிய கும்பல் தொடர்பான விசாரணை ஆரம்பம்.

யாழ். காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில்களில் இருந்து தொடர்ச்சியாக டீசல் திருடிய கும்பல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இரவு வேளையில் ரயில்கள் தரித்து நின்றபோது கடந்த ஒன்பதாம் திகதி அடையாளம் தெரியாத குழுவொன்று திருட்டில் ஈடுபட்ட வேளை, நிலையத்தில் பாதுகாப்பு கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகளால் குறித்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
இதன்போது திருட்டில் ஈடுபட்ட கும்பல் தப்பிச்சென்ற நிலையில் நான்கு 20 லீட்டர் கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்டவாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
ரயில்களின் எரிபொருள் தாங்கியின் திறப்புக்கள் அனுராதபுரத்திலேயே இருப்பதாக கூறப்படும் நிலையில் குறித்த திருட்டுக்கு ரயில் நிலைய ஊழியர்களும் உடந்தையாக செயற்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில்,தொடர்ச்சியாக எரிபொருள் தாங்கியில் இருந்து எரிபொருள் திருடப்பட்டு வந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸார் மற்றும் ரயில் திணைக்களத்தினர் தனித்தனியே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
