எனது வீட்டின் முன்னே கொலை தொடர்பில் எனது பெயருக்கு களங்கம், பொலிஸ் நிலையத்தில் வியாழேந்திரன் முறைப்பாடு


எனது வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற கொலை தொடர்பில் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு நேற்று வருகை தந்த வியாழேந்திரன் அங்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான மற்றும் முற்றுமுழுதான பொய்யான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நபர் ஒருவர் பேஸ்புக் ஊடாக நேரலை செய்து எனது பெயருக்கும் முற்போக்கு தமிழர் கழகத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை முன்வைத்து வருகின்றார்.
முன்பு ஒரு தடவை அவருக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்தபோது, தான் இனி அவ்வாறு செயல் படமாட்டேன் என எங்களிடம் வந்து தெரிவித்ததையடுத்து அந்த வழக்கை வாபஸ் பெற்றேன்.
ஆனால், அவர் மீண்டும் எனது பெயருக்கும் கட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் தகாத வார்த்தைகள் மூலமாகவும் முகப்புத்தகத்தில் நேரலை செய்துள்ளார்.
அவருக்கு எதிராகவும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்”- என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
