கூட்டுப் படுகொலைகளுக்கான நீதி, என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருகோணமலையில் கவனவீர்ப்பு பேரணி

கூட்டுப் படுகொலைகளுக்கான நீதி, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம், அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து திருகோணமலையில் கவனவீர்ப்பு பேரணி நடைபெற்றது.
ஏ. எச். ஆர். சி. நிறுவனத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண பிரதேச சிவில் வலையமைப்பு நடத்திய மனித உரிமைகள் தின நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது.
காலை 9 மணியளவில் சிவன் கோவிலடியில் இருந்து கவனவீர்ப்பு பேரணி ஆரம்பமாகியது. இதன்போது வடக்கு - கிழக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, உண்மை மற்றும் பொறுப்புக் கூறல், கூட்டுப் படுகொலைகளுக்கான நீதி, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம், அரசியல் கைதிகளின் விடுதலை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கல், மீனவர்களுக்கான நிவாரணம் வழங்கல், பன்முகப்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொ டுக்கும் பெண்களுக்கான தீர்வு, 76 வருட தேசிய இனப் பிரச்சினைக்கான நிலையான அரசியல் தீர்வு போன்ற விடயங்களை உள்ளடக்கி பதாகை களை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் மக்கள் நடைபவனியாக சென்று குளக்கோட்டன் மண்டபத்தை சென்றடைந்தனர்.
இதன் பின்னர், கிழக்கு மாகாண பிரதேச சிவில் வலையமைப்பு பிரதிநிதிகள் தாங்கள் எதிர்நோக்கிய உரிமை பிரச்சினைகளை குறிப்பிட்டதுடன் பிரதேச செயலாளர், ஆளுநரின் பிரத்தியேக செயலாளர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர், சட்டத்தரணிகள் ஏ. எச். ஆர். சி. நிறுவனத்தின் இணைப்பாளர் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வின் இறுதியில் குறித்த விடயங்களை உள்ளடக்கிய மகஜர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ. எல். இசைதீனிடம் கிழக்கு மாகாண பிரதேச சிவில் வலையமைப்பின் பிரதிநிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக கிழக்கு ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
