உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயகத் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான 2 ஆவது கலந்துரையாடல் இன்று

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தமிழ்க் கட்சிகளின் இரண்டாவது கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
இன்று முற்பகல் யாழ். திருநெல்வேலியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேற்படி விடயம் தொடர்பான தமிழ்க் கட்சிகளின் முதலாவது சந்திப்பு கடந்த 23 ஆம் திகதி யாழ். இணுவில் பகுதியில் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது.
இன்றைய சந்திப்பில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயகத் தமிழரசுக் கட்சி, சமத்துவக் கட்சி ஆகிய 8 கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேற்படி கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி இணைவதா இல்லையா என்பது தொடர்பான முடிவு கட்சியின் செயலாளர் நாயகத்துடன் பேசி விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்தக் கட்சியின் சார்பில் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
