போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால், சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று இரவிலிருந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட்டிற்கு செல்லும் 4 விமானங்களும், அங்கிருந்து சென்னைக்கு வரும் 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மழை காரணமாக விமானங்கள் புறப்படும் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதால் பயணிகள் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த 8 விமானங்களை தவிர்த்து, மற்ற விமானங்கள் வழக்கம் போல செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.