
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனுக்கும், சீனா மக்கள் குடியரசின் தூதுக் குழுவினருக்குமிடையிலான சந்திப்பொன்று கண்டியிலுள்ள ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்றது.
சீனாவின் தேசிய இனங்கள் ஆணைக்குழு அமைச்சர் பென் யூ தலைமையில் இந்த சீனக் குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இச் சந்திப்பில், மேலும், சுற்றுலாத்துறை
அபிவிருத்தி, சுற்றுலாத்துறையினரை கண்டிக்கு அழைத்து வருவது, இரு நாடுகளுக்குமிடையே காணப்படுகின்ற பௌத்த, சமய கலாசார உறவுகளையும் உயர் கல்வித்துறையையும் அபிவிருத்தி செய்வது மற்றும் சீனாவில் மேற்கொள்ளக் கூடிய உயர் கல்விக்கான புலமைப்பரிசில் திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பில், சீனாவின் தேசிய இனங்கள் தொடர்பான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் வே கொசிங், பணிப்பாளர் கியூபெங், பிரதிப்பணிப்பாளர் சென் சிங்கொங் மற்றும் சீனாவின் மின்சு பல்கலைக்கழக வெகுஜன தொடர்பு பிரிவின் உதவித் தலைவர் கியூ கியாங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
