இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 56 கைதிகள் விமானம் மூலம் நாடு திரும்பினர்.
9 months ago

இலங்கையில் பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 56 கைதிகள் நேற்று ஞாயிற் றுக்கிழமை வாடகை விமானம் மூலம் தமது நாடு திரும்பினர்.
கைதிகளை பாகிஸ்தானுக்கு அழைப்பதற்கான அனைத்து செலவுகளையும் அந்த நாட்டின் பிரபல வர்த்தகரும் மத்திய அமைச்சருமான அப்துல் அலீம்கான் தனிப்பட்ட முறையில் ஏற்றார் என்று கூறப்படுகின்றது.
அமைச்சர் அப்துல் அலீம் கானின் இந்த செயலுக்கு அந்நாட்டின் மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி நன்றி தெரிவித்தார்.
இந்த செயல்முறைக்கு ஒத்துழைத்த இலங்கை அரசாங்கத்துக்கும் உயர்ஸ்தானிகருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
