தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து நேற்று நடந்த பரப்புரை கூட்டத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து நேற்று நடந்த பரப்புரை கூட்டத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் சார்பில் சங்கு சின்னத்தில் தமிழ்ப் பொது வேட் பாளராக பா. அரியநேத்திரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வவுனியா - குருமண்காடு கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்த தலைமையில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொது வேட்பா ளர் அரியநேத்திரன் மற்றும் அவரை ஆதரித்து ரெலோ தலைவரும் எம்.பியு மான செல்வம் அடைக்கலநாதன், ஈ. பி. ஆர். எல். எவ். தலைவர் சுரேஷ் பிறேம சந்திரன், வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் சிவநேசன், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், யாழ். மாநகர முன்னாள் மேயர் மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்று பேசியிருந்த னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
