கனடா எயார் நிறுவனம் வேலை நிறுத்தம் காரணமாக விமான சேவைகளை இரத்து செய்யும் நிலை தோன்றியுள்ளது.

1 year ago


கனடா எயார் நிறுவனம் வேலை நிறுத்தம் காரணமாக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் விமான சேவைகளை இரத்து செய்யும் நிலை தோன்றியுள்ளது.

திங்கட்கிழமை வெளியான ஓர் அறிக்கையில் எயார் கனடா தலைமை நிர்வாக அதிகாரி மைக்கல் ரூசோ இந்தத் தகவலை வெளியிட்டார்.

இந்த வேலை நிறுத்தத்தால் எயார் கனடா பயணிகள் 80 சதவீதம் பேர் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (15) இருதரப்பு தீர்வு எட்டப்படாவிட்டால், 72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

எயார் கனடா விமானிகள் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக செயல்பாடுகளை இடைநிறுத்துவதற்கான திட்டங்களில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

72 மணி நேர வேலை நிறுத்த அறி விப்பு காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் ஆரம்பிக்கும் நிலையில், அடுத்த புதன்கிழமைக்குள் (18) விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.