இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் இதுவரை கைது.-- பொலிஸார் தெரிவிப்பு
8 months ago

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தமை, சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளைக் காட்சிப்படுத்தியமை, சந்தேக நபர்களை விடுவிப்பதற்காகப் பொலிஸ் நிலையங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இதேவேளை,தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் வேட்பாளர்களின் 353 ஆதரவாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
