
10ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றிருந்த நிலையில் நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்கான பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தை நடத்துவதற்கான திகதி தீர்மானிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது ஆளும் தரப்பினால் 26ஆம், 27ஆம் திகதிகள் முன்மொழியப்பட்டபோது சிறீதரன் எம்.பி. குறித்த இரண்டு திகதிகளில் மாவீரர்கள் வாரத்தின் இறுதி நாளாக இருப்பதால் பங்கெடுப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து 28ஆம் திகதி மாலை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், மாவீரர் வாரத்தினால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்ற சிறீதரன் எம்.பி. கூறிய போதும் எவ்விதமான பிரதிபலிப்புக்களையும் கட்சித் தலைவர்கள் வெளியிடவில்லை.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
