யாழில் கணவன் உயிரிழந்ததால் மனைவியும் தனது உயிரை மாய்க்க முற்பட்டு வைத்தியசாலையில் சேர்ப்பு

யாழில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தனது உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
யாழ். பருத்தித்துறையில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
புலோலி தென்மேற்கு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் சிறிராஜ் (வயது 26) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி குடும்பஸ்தருக்கு கடந்த 22 ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது.
இந்நிலையில் உறவினர்கள் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அன்றைய தினமே யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், கணவனின் பிரிவைத் தாங்க முடியாமல் மனைவி பெருமளவான மாத்திரைகள் உட் கொண்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
