அபுதாபி டி10 லீக் கிரிக்கெட் தொடரில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு தண்டனை விதிப்பு.

அபுதாபி டி10 லீக் கிரிக்கெட் தொடரில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு தண்டனை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியில் ஊழல் இடம்பெற்றதாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புனே டெவில்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் அசார் சைடி மற்றும் அணியின் உரிமையாளர்களான பராக் சங்கவி மற்றும் கிரிஷன் சவுத்ரி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டதாக ஐசிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சைடிக்கு 5 ஆண்டுகள் கிரிக்கெட் தடையும், மற்ற இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் கிரிக்கெட் தடையும் விதிக்கப்பட்டது.
ஆனால் அவர்களுக்கான இறுதி ஆண்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனை 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ஐசிசி அறிவித்துள்ளது.
அதன்படி, பராக் சங்கவி மற்றும் கிரிஷன் சவுத்ரி ஆகியோர் செப்டம்பர் 19, 2024 முதலும், சைடி 2027 செப்டம்பர் 19 முதலும் கிரிக்கெட்டில் இணையாளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
