யாழ்.ஜனாதிபதி மாளிகையை தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாற்றுமாறு முன்வைத்த யோசனை பரிசீலிக்கப்படும்.--ஜனாதிபதி தெரிவிப்பு


யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையை தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாற்றுமாறு முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்ததாவது:
நான் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் எனக்கு அரச செலவில் வீடு தேவையில்லை. பாதுகாப்பும் வேண்டாம்.
கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் மாத்திரம் பராமரிக்கப்படும். நுவரெலியா, யாழ்ப்பாணம், உடவலலை உட்பட ஏனைய பகுதிகளில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அமைச்சர்களுக்குரிய வீடுகள் தற்போது மதிப்பிடப்பட்டு வருகின்றன.
அவ்வாறு சொத்து பெறுமதியை மதிப்பிட்ட பிறகு, பொருளாதாரத்துக்கு பயனளிக்கும் வகையில் அவை பயன்படுத்தப்படும்.
அதற்குரிய வழிமுறைகள் பற்றி ஆராய்ந்து யோசனைகளை முன்வைப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது -என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
