நாட்டில் இந்த ஆண்டு நடைபெறவிருப்பதால் எதிர்வரும் செப்ரெம்பரில் ஆரம்பமாகவுள்ள ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணைக்கு பதிலாக, கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பது குறித்து ஜெனிவா ஆராய்வதாகக் கூறப்படுகின்றது.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட் டத்தொடர் எதிர்வரும் செப்ரெம்பரில் ஆரம்பமாகிறது.
இதன்போது, இலங்கை தொடர்பில் கடந்த 2021 மார்ச் மாதம் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட "இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்" எனும் தலைப்பிலான 46/1 தீர்மானம் எதிர்வரும் செப் ரெம்பருடன் முடிவுக்கு வருகின்றது. எனவே, இந்தக் கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் மேலும், காட்டமான புதிய பிரேரணையை முன்மொழியுமா அல்லது வேறு ஏதேனும் நகர்வுகளை மேற்கொள்ளுமா எனும் பல் தரப்பட்ட கேள்விகள் காணப்படுகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் இது தேர்தல் ஆண்டா கையால் புதியதோர் அரசாங்கம் ஆட் சிப் பீடமேறும் பட்சத்தில், அந்த அரசாங்கம் புதிய தீர்மானத்தை எவ்வாறு அணுகும்? அந்தத் தீர்மானம் அரசாங்கத்துக்கு சுமையாக அமையக் கூடுமா? என்பன போன்ற கேள்விகள் ஐ. நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் இணை அனுசரணை நாடுகள் மத்தியில் காணப்படுகிறது.
எனவே எதிர்வரும் செப்ரெம்பர் மாத கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக புதிய பிரேரணைக்கு பதிலாக இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த தீர்மானத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கும் சாத்தியப்பாடு குறித்து ஆராயப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை தற்போது பிரிட்டனில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை அடுத்து, எதிர்வரும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கான அழுத்தத்தை ஏனைய இணையனுசரணை நாடுகளுக்கு பிரிட்டன் வழங்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அவ்வாறு கொண்டு வரும் பட்சத்தில் அதன்மீதான வாக்கெடுப்பு முடிவுகள் எத்தகையதாக அமையக் கூடுமென உறுதியாகக் கூற முடியாது -என்று கொழும்பு வார இதழ் ஒன்று மனித உரிமைகள் அமைப்புகளை மூலமாகக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
