கிளிநொச்சி - தர்மபுரத்தில் 35 வயதான மூன்று பிள்ளைகளின் தயார் ஒருவர் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
7 months ago

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் திட்ட கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை, 35 வயதான மூன்று பிள்ளைகளின் தயார் ஒருவர் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்த தர்மபுரம் பொலிஸார், குறித்த தாயார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆகியோர் சடலத்தை பார்வையிட்டனர்.
சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
