யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்

3 months ago



யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும் கல்லூரியின் பிரதி முதல்வர் தயாளன் தலைமையில் இன்று (05) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இவ்விழாவில் பிரதம விருந்தினராக எந்திரி.வீ. ஜே.தொய்வேந்திரா கலந்துகொண்டு பல்வேறு சூழல் சார் கருத்துக்களை வழங்கினார். 

விழாவில் விருந்தினர்களாக எதிர் காலத்திற்குரிய சுற்றுச் சூழல் கழக செயலாளர் ம.சசிகரன், மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் ப.அருந்தவம், மத்திய சுற்றாடல் அதிகாராக சபையின் உடுவில் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ரூபினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களின் சுற்றுச் சூழல் தொடர்பான ஆற்றுகைகளும் இடம்பெற்றன.


அண்மைய பதிவுகள்