ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 9ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி ஜூலை மாதம் 9ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் உலகளாவிய மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான அறிக்கையுடன் ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கும் இந்தக் கூட்டத்தொடரின் விடயதான மற்றும் நேர ஒழுங்கு அட்டவணையில் இலங்கையுடன் தொடர்புடைய விடயங்கள் உள்வாங்கப்படவில்லை.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரிலேயே இலங்கை தொடர்பான ஆணையாளரின் வாய்மொழிமூல அறிக்கை வெளியிடப்படவுள்ளதுடன், புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவருவது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.
59ஆவது கூட்டத்தொடரின் மத்தியில் எதிர்வரும் 23ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
(அ-எ -இ)
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
