
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்த சம்பவம் இன்று(30.07.2024) காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய கந்தையா செல்லச்சாமி என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவரும் அவரது மனைவியும் சம்பவம் நிகழ்ந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அவரது மனைவி இன்று(30) காலை வெளியே சென்றிருந்த வேளை அவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.
அத்துடன், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





