



வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (29) அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த வியாழக்கிழமை (25) வவுனியா பம்பைமடு பகுதியில் அஸ்வெசும திட்டத்திற்கான பெயர் பதிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வருகை தந்த பொதுமகன் ஒருவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியமைக்கு கண்டனம் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது அரச உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பை வழங்கு, அவர்கள் தங்கள் கடமைகளை செய்ய விடு போன்ற கோஷங்கள் எழுப்பியவாறும் பதாகைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
