தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பை கனடாவின் பிரம்ப்டன் மாநகர அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.

1 year ago


தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பை கனடாவின் பிரம்ப்டன் மாநகர அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.

முன்னதாக, இந்த நினைவுச் சின்னத்தை நிர்மாணிப்பதற்கு இலங்கையின் எதிர்ப்பை முன்வைத்து, இலங்கைத் தூதரக பொறுப்பதிகாரி துஷார ரொட்ரிகோ, பிரம்ப்டன் மாநகர முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அத்துடன், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷை அழைத்து இலங்கையின் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

எவ்வாறாயினும், இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசாங்கம் கூறுவதைக் கண்டு தனது அலுவலகம் அஞ்சப்போவதில்லை என பிரம்டன் முதல்வர் பெற்றிக் பிரவுன், கனேடிய வெளியுறவு அமைச்சருக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் தமிழ் சமூகம் தங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் மாவீரர்களை நினைவுகூருவதைத் தடுக்க இலங்கை அரசாங்கம் முயற்சி செய்யலாம்.

ஆனால், கனடாவில் அவர்களால் அதைச் செய்ய முடியாது. இந்தநிலையில், கனடாவில் நினைவேந்தல் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுக்க முயல்வது, உள்நாட்டு விடயங்களில், வெளிநாட்டு தலையீடாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்