யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ளுமாறு இன்று(05) கவனயீர்ப்புப் போராட்டம்

யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடனும் சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தி இன்று(05) கவனயீர்ப்பு போராட்டம்.
இதுதொடர்பில் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கலாறஞ்சினி தெரிவித்ததாவது:-
தமிழர் தாயகத்தில் காலத்துக்குக் காலம் பல்வேறு மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஆனால், அவற்றுக்கான நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டதா? என்று கேட்டால் அதற்கு 'இல்லை' என்பதுதான் பதிலாகவுள்ளது.
எனவே, இதுவரை அவதானிக்கப்பட்ட புதைகுழிகளுக்கு நீதிகோரியும், செம்மணிப் புதைகுழியில் சர்வதேச கண்காணிப்பைக் கோரியும், காணாமலாக்கப்பட்டோருக்கான சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை அகழ்வுப் பணிகளை பார்வையிட அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் செம்மணி வளைவுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் - என்றார்.
இந்தப் போராட்டத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
