பிரித்தானியாவில், முன்னாள் காதலனைத் தொடர்ச்சியாகத் தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறை.

பிரித்தானியாவில், முன்னாள் காதலனைத் தொடர்ச்சியாகத் தொல்லை செய்து வந்த பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிப்பு.
சோபி கால்வில் என்ற 30 வயதுடைய பெண்ணை டேவிட் பாக்லீரோ என்ற நபர் காதலித்து வந்துள்ளார்.
அண்மையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகக் அந்தப் பெண் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
காதலனை இழக்க விரும்பாத அவர், டேவிட்டிற்கு 1,000 முறை தொலை பேசியில் அழைப்பை ஏற்படுத்தி யுள்ளார்.
ஆனால் டேவிட் அந்த அழைப்பைத் தவிர்த்துள்ளார்.மேலும் டேவிட்டை கண்காணித்து வந்த அவர், டேவிட்டின் வீட்டிற்குள்ளும் அத்துமீறி நுழைந்துள்ளார்.
சோபியின் இந்த செயற்பாடுகளால் தனக்குப் பாதுகாப்பின்றி உணர்வ தாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் டேவிட் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் சோபிக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனை விதித்து பிரித்தா னிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
