மன்னார், ஓலைத்தொடுவாய் றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் உள்ள மக்களை எம்.பி ரவிகரன் பார்வையிட்டார்







மன்னாரில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மன்னார், ஓலைத்தொடுவாய் றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று முன்தினம் தினம் சந்தித்து கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.
காற்றாலை திட்டத்தின் போது வடிகால்கள் மூடப்பட்டதனாலேயே ஓலைத் தொடுவாய் பகுதியில் வெள்ளப் பாதிப்பு அதிகரித்திருப்பதாக மக்களால் இதன்போது, பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.
இவ்வாறு காற்றாலைத் திட்டத்தின்போது மூடப்பட்ட வாய்க்கால்களை மறுசீரமைப் புச் செய்தால் வெள்ள அனர்தத்தைக் குறைக்க முடியும் எனவும் அதற்கு உரிய நவடிக்கை எடுக்குமாறும் மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும் தமக்கு நுளம்பு வலை பெற்றுத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் வாய்க்கால்களை மறுசீரமைப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்த ரவிகரன், இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கு நுளம்பு வலைகள் வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
