
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை யின் வருமான வரி உத்தி யோகத்தர்கள் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இலஞ்சம், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இலஞ்சம் பெற்று வருகின்றனர் என்று இலஞ் சம், ஊழல் தடுப்பு ஆணைக் குழுவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கொழும்பிலிருந்து கிளிநொச்சி வந்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.
உருத்திரபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட இருவரும் ஆணைக்குழு அதிகாரிகளால் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இரு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்ட தகவலை கரைச்சி பிரதேச சபை செயலாளர் உறுதிப் படுத்தியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
