பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா. ஊழியர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்

1 year ago


பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா. ஊழியர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

போரில் இதுவரை 41 ஆயிரத்துக்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டதுடன், இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும்.

இஸ்ரேல் தாக்குதலில் ஐ.நா ஊழி யர்களே படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. முகவரகம் மத்திய காசாவில் பாடசாலை ஒன்றை நடத்தி வருகிறது.

இந்த பாடசாலையின் மீது கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 6 ஐ.நா. ஊழியர்கள் கொல்லப்பட்டனர் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில், உயிரிழப்பு எண் ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது.இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்