IMF உடனான வேலைத்திட்டத்துக்கு இலங்கைக்கு அவுஸ்திரேலியாவின் உதவி கிட்டும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் போல் ஸ்ரிபென்ஸ் உறுதியளித்தார்

1 year ago


சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியாவின் உதவி கிட்டும் என்றும் இலங்கைக்குள் நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க அவுஸ்திரேலியா விருப்பத்துடன் உள்ளது என்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் போல் ஸ்ரிபென்ஸ் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுக்கும் ஆஸி உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நேற்றுப் புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, இலங்கையுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் சமுத்திர பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கைக்கு, அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் உயர்ஸ்தானிகரால் உறுதியளிக்கப்பட்டது.

அதேபோன்று, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பலப்படுத்திக் கொள்ளும் தீர்மானமிக்க காரணியாக விளங்கும் பொருளாதார வெளிப்படைத்.        தன்மையை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் ஆஸி உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார்.