இலங்கையுடன் மிக நெருங்கிய தொடர்பைப் பேண தாம் தயாராக இருப்பதாக சீன வெளிவிவகாரப் பேச்சாளர் மாவோ நிங் தெரிவிப்பு
6 months ago

இலங்கையுடன் மிக நெருங்கிய உயர்மட்டத் தொடர்பைப் பேணுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சீன வெளிவிவகாரப் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
சீனாவும். இலங்கையும் ஒருவருக்கொருவர் அவசியமான உதவிகளை வழங்குகின்ற, நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கின்ற ஒத்துழைப்புப் பங்காண்மை நாடுகளாகும்.
இரு நாடுகளுக்கும் இடையில் மிகநெருக்கமான உயர் மட்டத் தொடர்புண்டு.
அத்தகைய உயர்மட்டத் தொடர்புகளைப் பேணுவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரியத் தொடர்புகளை முன்கொண்டு செல்வதற்கும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பல்துறைசார் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் சீனா தயாராக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
