புலனாய்வு பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் யாழ் குருநகரில் இயங்கும் விபச்சார விடுதி!! 4 பேர் கைது!!




யாழ்ப்பாணம் குருநகர் ஹோலிகுறோஸ் வைத்தியசாலை அருகில் உள்ள நாதன் தனியார் விடுதியில் விபச்சாரம் இடம்பெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த விடுதி பிடிபட்டதாகவும், இரண்டு நாட்களுக்கு முன் இந்த விடுதியை யாழ்ப்பாண குற்றதடுப்பு பிரிவினர் தீடீர் என சோதனை செய்த போது இரண்டு பெண்பிள்ளைகளும், ஒரு ஆண், மற்றும் விடுதியின் உரிமையாளர் ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர்.
அவர்களை கைது செய்ய முற்பட்ட வேளை குறித்த விடுதியின் உரிமையாளர் புலனாய்வு பிரிவு உயர் அதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்தததை கூறியுள்ளார்.
உடனே புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும் இன்னொரு நபரும் மது போதையில் முகத்திற்கு மாஸ்க் போட்டபடி அங்கு வந்து தான் புலனாய்வுப் பொறுப்பதிகாரி என அங்கு நின்ற பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
உடனே அங்கு நின்ற பொலிஸ் மாஸ்க்க ஐ கழற்றுமாறு கூறியுள்ளார்கள். இருப்பினும் அவர் மாஸ்க்கை கழற்றாது அங்கு நின்று குறித்த விடுதியின் உரிமையாளர் மற்றும் பிடிபட்ட விபச்சாரிகளுக்கு ஆதரவாக பொலிசாருடன் வாதிட்டதாக தெரியவருகின்றது.
குறித்த புலனாய்வு அதிகாரியின் செயற்பாட்டைப் பொருட்படுத்தாத பொலிசார் குறித்த 4 பேரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகத் தெரியவருகின்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
