மட்டக்களப்பு கரடியனாறில் ஜீப் வண்டி விபத்தில் பாதசாரி காயமடைந்ததோடு, சாரதியான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

1 year ago



மட்டக்களப்பு, செங்கலடியில் கரடியனாறு பகுதியில் ஜீப் வண்டி மோதியதில் பாதசாரி காயமடைந்ததோடு, ஜீப் வண்டி சாரதியான கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான பாதசாரி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கைதான பொலிஸ் பொறுப்பதிகாரியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கரடியனாறு போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்