


வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் மண் வெட்டியால் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை ஈச்சங்குளம் அம்மிவைத் தான் பகுதியிலுள்ள தனது வீட்டில் குறித்த பெண் தனிமையில் இருந்துள்ளார்.
இதன் போது அங்கு அத்துமீறி வந்த இளைஞன் ஒருவர் குறித்த பெண்மீது மண்வெட்டியை கொண்டு தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த பெண் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட் டார் என்று மருத்துவமனையில் தெரிவிக்கப் பட்டது.
இச்சம்பவத்தில் ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த வெற்றிமலர் (வயது - 57) என்ற பெண்ணே உயிரிழந்தார்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் தப்பிச்சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
