பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான கமலநாதன் விஜிந்தன் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முகநூலில் விடுதலைப் புலிகளின் அமைப்பை மீள் உருவாக்கும் வகையிலான விடயங்களை பதிவு செய்ததன் மூலம் நாட்டில் இனப்பிரச்சினை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டும் வகையில் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட விஜிந்தன் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கடந்த 21ஆம் திகதி மறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த வழக்கின் சந்தேக நபர் சார்பாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று நீதிமன்றத்தில் சந்தேகநபரான கமலநாதன் விஜிந்தன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் சார்பில் தனது கனிஷ்ட சட்டத்தரணிகள் பிருந்தா சந்திரகேஷ் மற்றும் தம்பிராஜா தயானந்தராஜாவுடன் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா வாதத்தை முன்வைத்திருந்தார்.
அவரின் வாதத்தை ஏற்ற கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விஜிந்தனை பிணையில் விடுவித்தது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
