நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத் தப்பட்டுள்ளது.
போதியளவான முன்பதிவு இல்லாமை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் நந்த கோபன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 31ஆம் திகதி வரை இந்த நடைமுறை காணப்படும் எனவும். பயணிகள் வருகை அதிகரிப்பின் அடிப்படையில், எதிர்வரும் செப்ரெம்பர் முதலாம் திகதி முதல் நாளாந்தம் குறித்த கப்பல் சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் மாத்திரமே நாகப்பட்டி னத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை முன்னெடுக்கப்படும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
