கிளிநொச்சியில் நடந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

1 year ago


கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன், அவர்கள் திருட்டுக்குப் பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றியதாகவும் களவாடப்பட்ட நகைகள் சிலவற்றை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இராமநாதபுரம், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், முள்ளியவளை, நெடுங்கேணி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

களவாடிய நகைகளை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள வங்கிகள் மற்றும் அடைவு பிடிக்கும் நிலையங்களில் அடைவு வைத்து 28 இலட்சம் ரூபாயை நால்வரும் பெற்றுள்ளனர் என்று                   விசாரணைகளில்                        தெரியவந்ததாகவும் கூறப்பட்டது.

சந்தேக நபர்கள் நால்வரையும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அண்மைய பதிவுகள்