தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது.-- அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவிப்பு

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது.அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும்.
நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்கவேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசின் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்-
மாவீரர் தினத்தை தமிழ் மக்கள் இம்முறை எந்தவிதமான கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இல்லாமல் அனுஷ்டிக்க முடியும்.
அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்கும் மக்களை ஒளிப்படங்கள் எடுக்கவேண்டாம் என்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே மக்கள் சுதந்திரமான முறையில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க முடியும்.
அது அவர்களின் உரிமை. அதற்கு அரசு தடை எதுவும் போடாது- என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
