யாழில் வெள்ளம் பல இடங்களில் மலக்குழிக்கழிவு நீர் கிணற்று நீருடன் கலக்கும் அபாயம். பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு

யாழில் வெள்ளம் பல இடங்களில் மலக்குழிக் கழிவு நீர் கிணற்று நீருடன் கலக்கும் அபாயம். பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு
கொட்டித் தீர்த்த கன மழை கிணறுகளின் நீரின் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
பெருக்கெடுத்த வெள்ள நீர் கிணறுகளை நிரப்பியுள்ளதோடு, பல இடங்களில் மலக்குழிக் கழிவு நீர் கிணற்று நீருடன் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொதித் தாறிய நீரைப் பருகுவதே பாதுகாப்பானது என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
வடக்கு அதன் வருடாந்த சராசரி மழை வீழ்ச்சியான 1240 மில்லி மீற்றர் மழையை ஒக்ரோபர் மாதம் முடிவடைவதற்கு முன்பாகவே பெற்றிருந்த நிலையிலேயே பெங்கால் புயல் 720 மில்லி மீற்றர் மழையை மேலதிகமாகக் கொண்டு வந்து கொட்டியது.
ஏற்கனவே நிலம் அதன் நீர்க் கொள்ளளவை எட்டியிருந்த நிலையில் இம் மேலதிக மழைநீர் போக்கிடமின்றி வெள்ளக்காடாக உருவெடுத்ததில் நீர்நிலைகள் மாசடைந்துள்ளன.
வெள்ள நிவாரணப் பணிகளில் நான் ஈடுபட்டிருந்த போது பல்வேறு பகுதிகளிலுமுள்ள கிணறுகளில் மலக்குழிக் கழிவுநீர் கலக்கும் அபாயம் என்னால் உணரப்பட்டுள்ளது.
கிணறுகளில் குளோரின் இட்டுத்தொற்று நீக்குவதும், கிணற்று நீரை இறைப்பதும் அவசியமானவை.
எனினும் இவை மாத்திரமே பாதுகாப்புக்குப் போதுமானவையல்ல.
வெடிப்புகளையும் துளைகளையும் கொண்ட மயோசின் சுண்ணாம்புப் பாறைகளினூடாக கிணற்றுக்குள் கசியும் நிலத்தடி நீர் இன்னும் சில வாரங்களுக்கேனும் கிருமிகளைக் காவி வரும் அபாயம் உள்ளதால் கொதித்து ஆறிய நீரே முழுப் பாதுகாப்புக்கான உத்தரவாதமாகும் -என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
