துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்.

ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித் துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர் பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கிக்கு மேலதிகமாக ரிப்பீட்டர் ரக துப்பாக்கியை வழங்குவதற்கு தீர்மா னிக்கப்பட்டதாக அமைச்சு கூறியுள்ளது.
அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளை வழங்க முடியுமென பாதுகாப்பு அமைச்சினால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறி விக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் குஷானி ரோஹணதீரவிடம் வினவிய போது, தற்போது 5 பாராளுமன்ற உறுப்பினர்களால் ரிப்பீட்டர் ரக துப்பாக்கிக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கட்டணம் அறவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
