2023 இல் இலங்கை மத்திய வங்கியில் இருந்து 5 மில்லியன் ரூபா காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

2023 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் இருந்து 5 மில்லியன் ரூபா காணாமல் போனமை தொடர்பிலான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதன் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால தெரிவித்துள்ளார்.
2023 ஏப்ரல் 11 மாதம் நாணயச் செயல்பாடுகளின் போது அதன் பெட்டகங்களில் ஒன்றிலிருந்து 5 மில்லியன் ரூபா காணாமல் போனதாகக் கூறி, மத்திய வங்கியினால் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாகவும், கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அந்த நேரத்தில், மத்திய வங்கி இந்த சம்பவத்தை முழுமையாக ஆராய்ந்து அதன் உள் கட்டுப்பாடுகள் செயல்முறைகள் போன்றவற்றை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாக இமேஷா முத்து மால குறிப்பிட்டார்.
பொலிஸாரின் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு மத்திய வங்கி தொடர்ந்து உதவுவதாக உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
கிளிநொச்சிய
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
