19 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்களுடன் தாய்லாந்து பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
37 வயதுடைய தாய்லாந்து பெண்ணே கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு 11.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பின்னர் சந்தேகநபர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 22 கிலோ நிறையுடைய குஷ் மற்றும் ஹாஷ் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
