மன்னாரில் தனியார் வகுப்பு சிறுவர்களுக்கு விற்பனைக்காக வைத்திருந்த 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளை படையினர் கைப்பற்றியுள்ளனர்.

தனியார் வகுப்புகளுக்கு வரும் சிறுவர்களுக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
வட மாகாண விசேட அதிரடி சோதனைப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், தலைமன்னார் பொலிஸார் அம்பாள் நகர் பகுதியில் கூடுதல் வகுப்புகள் நடைபெற்று வரும் இடத்தின் முன்பு நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இதன்போது, குறித்த இடத்துக்கு அருகாமையில் இருந்து சுமார் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான 108 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் சிறுவர்களை இலக்கு வைத்து இந்த போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
