இலங்கையின் சுதந்திரதினமான நேற்று முன்தினம் லண்டனில் வாழும் ஈழத் தமிழர்களும் கரிநாளாக அனுஷ்டித்தனர்.
5 months ago

இலங்கையின் சுதந்திரதினமான நேற்று முன்தினம் லண்டனில் வாழும் ஈழத் தமிழர்களும் கரிநாளாக அனுஷ்டித்தனர்.
நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் பெரும் எண்ணிக்கையான ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பிரித்தானியப் பிரதமர் இல்லம் வரை அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
இந்தப் பேரணியின் பின்னர் தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை மீள பெற்றுக் கொள்வதற்கு உதவ வேண்டிய கடப்பாடு பிரிட்டனுக்கு உள்ளதை வலியுறுத்தி பிரிட்டிஷ் பிரதமருக்கும் மன்னர் சார்லஸ் மற்றும் உயரதிகாரிகளுக்கும் கடிதம் ஒன்றை ஏற்பாட்டாளர்கள் வழங்கினர்.
இந்த நிகழ்வில் உலகளாவிய புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
