இலங்கையில் இதுவரையான காலப் பகுதியில் 436,000 சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள் அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு..

1 year ago


இதுவரையான காலப் பகுதியில் 436,000 சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகளை அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2,400 இற்கும் மேற்பட்ட சட்டவிரோத பதாகைகள் மற்றும் கட் அவுட்டுக்கள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ கூறினார்.

அத்துடன், தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 65 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.