

“மீனவ சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் கண்ணியமான வாழ்வுக்கு எம்மை அர்ப்பணிப்போம், உணவு இறையாண்மையை உறுதி செய்வோம்” என்னும் தொனிப்பொருளில் முல்லைத்தீவில் நேற்று (10) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி ஒன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பித்த இந்த நடைபவனி, முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாசார மண்டபம் வரை இடம்பெற்றது.
குறித்த நடைபவனியில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்திய இழுவைமடி ஆக்கிரமிப்பை நிறுத்துதல், மீனவ சட்டத்தை உடன் அமுல்படுத்துதல், சட்டவிரோத மீன்பிடிச் செயற்பாடுகளை முற்றாக தடை செய்தல், கனியமணல் அகழ்வைக் கட்டுப்படுத்தல், சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பண்ணை வளர்ப்புத் திட்டங்களை நிறுத்துதல், காற்றாலை மின்சாரத் திட்டத்தைத் தடை செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து கோசங்களை எழுப்பியவாறும், பாதாதைகளைத் தாங்கியவாறு நடைபவனியில் ஈடுபட்டனர்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் 16 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், மீனவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசபை கலாசார மண்டபத்தில் உலக மீனவ தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
