யுக்திய நடவடிக்கையில் போதைப்பொருள் சார்ந்த 713 சந்தேகநபர்கள் கைது!

1 year ago


நாடளாவிய ரீதியில் நேற்று காலை வரையான 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட யுக்திய நடவடிக்கையில் போதைப் பொருள் குற்றம் தொடர்பில் 713 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 701 ஆண்களும் 12 பெண்களும் காணப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கைதான சந்தேக நபர்களில் 30 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட் டுள்ளதுடன், 55 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 197 கிராம் 213 மில்லிகிராம் ஹெரோயின், 647 கிராம் 9 மில்லிகிராம் ஐஸ், 3 கிலோ 89 கிராம் 493 மில்லிகிராம் கஞ்சா, 10,752 கஞ்சா செடிகள் மற்றும் 440 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.