அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
தபால்மூல வாக்களிப்புக்கு ஓரிரு நாள் இருக்கும்போது அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.
சம்பள அதிகரிப்புக்கான கோரிக்கையை முன்வைத்து நாம் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினோம்.
அந்த சந்தர்ப்பத்தில் எம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் தேர்தலை மையமாகக் கொண்டு கடந்த அரசாங்கத்தினால் அவ்வாறான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தற்போதைய அரசாங்கம் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
நாம் ஒருபோதும் கட்சி சார்ந்து எமது தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை.
அரச ஊழியர்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே வாழ்க்கையை கொண்டு செல்கிறார்கள்.
ஆதலால் இந்த விடயத்தில் அரசாங்கம் அக்கறைகொள்ள வேண்டும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
