
தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையை ஒரு பெற்றோலிய மையமாக நிறுவுவதற்கான ஆரம்பப் பணிகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தொடங்கியுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( சவுதி அரேபியா), குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் தூதர்களுடன் நடத்தப்பட்டதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை மேம்படுத்துதல் மற்றும் திருகோணமலையில் புதிய எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை நிர்மாணித்தல் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இலங்கையின் புவியியல் இருப்பிடம் மற்றும் திருகோணமலை துறைமுகத்தின் நன்மைகளைக் கருத்தில் கொண்டு, பெற்றோலியப் பொருட்களை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதற்கான பிராந்திய மையமாக இலங்கை மாற முடியும்" என்று ராஜகருணா தெரிவித்தார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியுடன் திருகோணமலை எண்ணெய் சேமிப்பு தொட்டிகள் அமைந்துள்ள தளத்தை ஆய்வு செய்வதற்காக தூதர்கள் திருகோணமலைக்குச் செல்லவுள்ளனர்.
எண்ணெய் கப்பல்களை நிறுத்துவதற்காக கட்டப்படவுள்ள புதிய தளம் மற்றும் புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்திற்கான தளத்தையும் தூதுக்குழு இதன் போது பார்வையிடும்.
கெரவலப்பிட்டியை தளமாகக் கொண்ட கொழும்பில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு பங்கரிங் திட்டத்தைத் தொடங்க கட்டார் தூதர் ஒப்புக் கொண்டுள்ளார்.
நீண்ட கால ஒப்பந்தங்களுடன், எந்த இடைத்தரகர்களும் இல்லாமல் அரசாங்கத்திற்கு இடையிலான ஒப்பந்தங்களின் கீழ் எரிபொருளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் தூதர்களுடனான கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், சப்புகஸ்கந்தையில் மற்றொரு சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிக்கவும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, திருகோணமலையில் பெற்றோலியத்துறை மேம்பாட்டுத் திட்டங்களில் இந்தியாவும் ஆர்வம் காட்டியுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இந்திய எண்ணெய் நிறுவனம் இடையேயான கூட்டு முயற்சியான திருகோணமலை பெற்றோலியம் டெர்மினல் லிமிடெட் அமைப்பதற்கான ஆர்வ வெளிப்பாடுகள் கோரப்பட்டுள்ளன.
இந்த திட்டம் இந்தியாவுக்கு குத்தகைக்கு விடப்பட்ட திருகோணமலையில் உள்ள 61 எண்ணெய் தொட்டிகளை அடிப்படையாகக் கொண்டது.
இந்த கூட்டு முயற்சியின் 51 சதவீத பங்குகளை வைத்திருக்க இலங்கை ஆர்வம் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
