முல்லைத்தீவில் இரு ஆண்களால் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்!குடும்பஸ்தர் கைது; காதலனுக்கு வலை வீச்சு
1 year ago

முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர், இரு வேறு ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சந்தேநபர்களில் ஒருவரான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள் ளார்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சென்ற போதே, அந்தச் சிறுமி பாலியல் துஷ்பிர யோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமியின் காதலன் ஒருவரும், முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரும் சிறுமியுடன் தகாத உறவைப் பேணியமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மேற்படி குடும்பஸ்தர் கைது செய்யப்பட்ட நிலையில், காதலனைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
